;
Athirady Tamil News

தெல்லிப்பழை இரத்தவங்கிப் பொறுப்பதிகாரி விடுத்துள்ள வேண்டுகோள்..!! (வீடியோ)

0

“B” நெகட்டிவ், “O” நெகட்டிவ் மற்றும் “AB” நெகட்டிவ் போன்ற குருதி வகைகளுக்கு அண்மைக் காலமாகத் தொடர்ச்சியான தட்டுப்பாடு நிலவி வருகின்றமையால் குருதிக்கொடையாளர்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் வழங்க வேண்டுமென தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி- ம.பிரதீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். ஏழாலை இந்து இளைஞர் சபை உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினரின் அனுசரணையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(07) ஏழாலை மேற்கு உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்ககையில்,

குறித்த குருதி வகைகளுக்குச் சொந்தமான குருதிக்கொடையாளர்கள் தாமாக முன்வந்து எமது இரத்த வங்கியிலோ அல்லது இவ்வாறான நடமாடும் இரத்த வங்கி முகாம்களிலோ வருகை தந்து இரத்ததானம் வழங்க முடியும்.

தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு குருதிக் கொடையாளர்கள் உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + two =

*