;
Athirady Tamil News

இளைஞர்கள் துப்பாக்கி ஏந்திய காரணம் என்ன? – வெளிப்படுத்தினார் ஜனாதிபதி..!!

0

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் இளைஞர்கள் மீண்டும் துப்பாக்கி ஏந்தாத நிலையை ஏற்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்கு முன்னர் அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லையென அவர் மேலும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”இந்த நாட்டின் இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தாத நிலையை நாங்கள் ஏற்படுத்த வேண்டும். இதற்கு முன்னர் அதற்கான வேலைத்திட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், எமது அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. எமது அரசாங்கத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றை நீக்கி அரசாங்கத்தை சக்திமிக்கதாக மாற்ற வேண்டும்.

இந்த நாட்டில் உண்மையான, நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த சகல அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும், பொறுப்புடனும் பணியாற்ற வேண்டும்.

அதிகாரத்தில் இல்லாதவர்கள் எதனையும் சொல்வார்கள். ஆனால், பிரச்சினைகள் தொடர்பாக புரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த மூன்று வருட காலமாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.

தற்போது நிலவும் வறட்சி தொடர்பில் கரிசனை கொண்டுள்ளோம். எமது நாட்டை விட இந்தியாவில் அதிக வறட்சி காணப்படுகின்றது. உலகின் பல நாடுகளில் காணப்படும் பிரச்சினைகளை, அனுபவங்கள் மற்றும் அறிவின் மூலமாகவே அந்நாட்டவர்கள் வெற்றிகொள்கின்றனர். அதனை புரிந்துகொண்டு நாம் செயற்பட வேண்டும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 12 =

*