;
Athirady Tamil News

மூக்கை உடைத்துக் காட்ட நான் தயார் : ஆறுமுகன் தொண்டமான்..!! (வீடியோ)

0

மக்களுடைய சக்தியும் ஒற்றுமையும் கொண்டு கடந்த தேர்தலில் சிலரின் மூக்கை உடைத்தை போல எதிர்வரும் காலத்திலும் தில்லு இருந்தால் மோதி பார்க்கட்டும் அவர்களின் மூக்கை உடைத்து காட்டுகின்றேன் என ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளருமான நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த கூட்டு ஒப்பந்த காலப்பகுதியில் பலர் ஆடிய ஆட்டங்களை மக்கள் அறிந்துள்ளனர். ஆனால் இம்முறை அவ்வாறாக இல்லாது எதிர்வரும் செப்டம்பர் மாதம் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான உயர்வான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதில் தொழிலார் காங்கரஸ் முன்மும்மரமாக உள்ளது.

மேலும், இன்று தனது கரத்தை மலையக மக்கள் பலப்படுத்தி உள்ளார்கள். அதற்கேற்ப பிராந்திய முறைப்படி மக்கள் முன் சென்று அவர்களின் குறையை எதிர்வரும் காலத்தில் ஆராயவுள்ளேன்.

அதுமட்டுமன்றி இலங்கை தொழிலார் காங்கிரசையும் அதன் மக்கள் சக்தியையும் எவராலும் பிரிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*