;
Athirady Tamil News

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மட்டக்களப்பிற்கு விஜயம்..!! (வீடியோ & படங்கள்)

0

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்ட அவர், ஆலய பரிபாலனசபையினருடன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

மேலும், கிழக்கு மாகாண ஆளுனரின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படும் மாமாங்க தீர்த்தக்கேணி புனரமைப்பு பணிகளை பரவியிட்டார்.

ஆளுநரின் விஜயத்தின் போது, வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் உட்பட்ட சிலர் வருகை தந்திருந்தனர்.

மேலும், வடக்கு மாகாண ஆளுநரின் மட்டக்களப்பிற்கான குறித்த விஜயமானது இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + eighteen =

*