ரஷியாவின் பிரதமராக டிமிட்ரி மெட்வடேவ் மீண்டும் நியமனம்..!!

ரஷியா அதிபர் பதவிக்கு நடந்த தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை, அதிக வாக்கு வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி விளாடிமிர் புதின் பெற்று வெற்றி பெற்றார். சுமார் 70 சதவிகித வாக்குகளை அவர் பெற்றிருந்தார். இந்நிலையில், அவர் முறைப்படி இன்று அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.
தங்க முலாம் பூசப்பட்ட ரஷிய நாட்டின் அரசியல் சாசன நூலின்மீது ஆனையிட்டு நான்காவது முறையாக இன்று அதிபராக பதவியேற்ற அவர் 2024-ம் ஆண்டு வரை அதிபராக இருப்பார். இந்த பதவிக்காலத்தின்போது நாட்டுக்கு புதிய முகத்தை பிரதம மந்திரியாக புதின் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கி இருந்தது.
இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்துவரும் தனது தீவிர விசுவாசி டிமிட்ரி மெட்வடேவ்-ஐ அப்பதவியில் மீண்டும் நியமனம் செய்து அதிபர் புதின் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
இந்த நியமனத்துக்கு ரஷிய பாராளுமன்றத்தின் கீழ்சபை முறையாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுவெறும் சம்பிரதாயம் மட்டுமே என்னும் நிலையில் கீழ்சபையில் உள்ள புதினின் ஆதரவாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நியமனத்துக்கு நிச்சயமாக ஒப்புதல் அளித்து விடுவார்கள் என கருதப்படுகிறது. #Russiaprimeminister #DmitryMedvedev #newterm