;
Athirady Tamil News

டெல்லியில் புழுதி புயல் தாக்குதல் – மக்கள் கடும் அவதி..!!

0

தலைநகர் டெல்லியில் நேற்று இரவு 11 மணியளவில் புழுதி புயல் தாக்கியது. காற்றின் வேகம் மணிக்கு 70 கி.மீ. அளவுக்கு வீசியது. இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது என சப்தர்ஜங் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புழுதி புயலால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க டெல்லியின் பல்வேறு இடங்களில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

புழுதி புயல் தாக்கும் என்பதால் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Delhi #DustStorm

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 15 =

*