;
Athirady Tamil News

தமிழீழ அடையாள அட்டையை மீளவெளியிட சுவிஸில் ஏற்பாடு..!!

0

சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழ் இளையோரால் நடத்தப்படும் அக்கினிப் பறவைகள் அமைப்பால்
தமிழீழ அடையாள அட்டை மீள வெளியிடப்படவுள்ளது.

சுவிஸ், பேர்ண் மாநகரில் இது தொடர்பில் நேற்று (6) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு தொடர்பான விவரங்களை அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுப்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பில் அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மீள் வெளியீடு செய்யப்படும் தமிழீழ அடையாள அட்டையானது தற்கால உயர் தொழில்நுட்பத்துடன் கூடியதாக நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியன்று தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கோடு தமிழீழத்தில் தேசிய அடையாள அட்டை வெளியிடப்பட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு தமிழ் இறைமை பறிக்கப்பட்டதன் விளைவாக தமிழீழ தேசிய அடையாள அட்டையின் பயன்பாடு இல்லாமல் போனது.

இதனை மீளவும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் அக்கினிப் பறவைகளின் இந்த முயற்சி இன்றைய சூழ்நிலையில் தேவையானதா? என்ற வினா எழுவது இயல்பானதே.

2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற தமிழினத்து எதிரான வல்லாதிக்க சக்திகளின் கூட்டுச்சதி நடவடிக்கையானது, இனவழிப்பு என்பதையும் தாண்டி தமிழீழ நடைமுறை அரசையும் இல்லாமற்செய்துவிட்ட ஒரு தேசிய அழிப்பு நடவடிக்கையாகும்.

தமிழீழ நடைமுறை அரசின் அழிவோடு தமிழீழக் கோட்பாட்டின் நடைமுறைச் சாத்தியமும் வலுவிழந்துபோயிருப்பதும் வெளிப்படை.

தற்போது தமிழீழம் என்பது பெரும்பாலும் வெறும் நினைவுகளில் வாழ்ந்து வருகின்ற ஒன்றாகவே காட்சியளிக்கிறது.

தமிழீழத் தேசியக்கட்டுமானம் என்பது நினைவுகளில் மட்டுமின்றி நடைமுறையிலும் பேணப்படவேண்டும். தமிழீழ இறைமையானது சரணாகதியடையவோ, தாரை வார்க்கப்பாடவோ இல்லை என்பதை நந்திக் கடல்வரை இடம்பெற்ற வீரம் செறிந்த மற்றும் பெரும் ஈகத்துடன்கூடிய போர் எமக்குப் புலப்படுத்தி நிற்கிறது.

“புலிகளின் பெயரில்” மீண்டும், சுவிஸ் மக்களிடம் பணம் சேகரிக்க புறப்பட்டுள்ள “அக்கினிப் பறவைகள்” அமைப்பு..! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 10 =

*