;
Athirady Tamil News

காவிரி நீர் பங்கீடு பிரச்சினை: வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாள் அவகாசம் – பிரமாண பத்திரம் தாக்கல்..!!

0

காவரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த மே 8-ந் தேதிக்குள் (இன்று) ‘ஸ்கீம்’ ஒன்றை (வரைவு செயல்திட்டம்) தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டது.

இதுதொடர்பாக மத்திய அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை தயாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு ஏப்ரல் 9-ந் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மே 3-ந் தேதி தாக்கல் செய்வதற்காக, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டம் மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்காக தயாராக இருந்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 23-ந் தேதி கர்நாடகா முதல்-மந்திரியிடம் இருந்து பிரதம மந்திரிக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டு இருந்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏனென்றால் அது அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இல்லை. மேலும் இந்த வாரியம் தொடர்பான இயங்குமுறை எதையும் சுப்ரீம் கோர்ட்டு வரையறுக்கவில்லை. காவிரி நடுவர் மன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பரிந்துரை தான் செய்துள்ளதே தவிர உத்தரவாக கூறவில்லை.

பிப்ரவரி 16-ந் தேதியன்று பிறப்பித்த உத்தரவில் காவிரி நடுவர் மன்றத்தின் பரிந்துரையை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையிலும், சுப்ரீம் கோர்ட்டு அதை சிறிது மாற்றங்களுடன் ஏற்றுக் கொண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அவசியம் ஏதுமில்லை.

உண்மை நிலவரத்தின் அடிப்படையிலும், பிலிகுண்டுலு பகுதியில் இருந்து சாதாரண ஆண்டில் தமிழ்நாட்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதற்கு உத்தரவு பிறப்பித்த நிலையிலும் இது போன்ற உத்தரவு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மேலும் காவிரி தண்ணீர் மீது கர்நாடக மாநிலத்துக்கு உள்ள உரிமைக்கு எதிரானதும் ஆகும்.

மேற்கண்டவாறு கர்நாடக முதல்-மந்திரியின் கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்துகளும் கேட்கப்பட்டு வரைவு செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்த வரைவு செயல்திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய மந்திரி சபையின் ஒப்புதலை பெறுவதற்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் கோரப்படுகிறது.

இவ்வாறு மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + seven =

*