;
Athirady Tamil News

உணவகத்தில் ஆர்டர் எடுத்தவரின் உயிரை பறித்த மலைப் பாம்பு! இளம் பெண்ணால் நடந்த விபரீதம்..!! (வீடியோ)

0

சீனாவில் உணவகம் ஒன்றில் மலைப்பாம்பு கடித்ததால், உணவகத்தின் மேலாளர் பரிதாபமாக இறந்துள்ளார்.சீனாவின் Jiangsu மாகாணத்தின் Yangzhou பகுதியில் உள்ள பீட்சா உணவகத்திற்கு கடந்த 1-ஆம் திகதி பெண் ஒருவர் தன்னுடைய செல்லப் பிராணியான மலைப்பாம்பை அழைத்து வந்துள்ளார்.

அப்போது உணவகத்தில் இருக்கும் மேஜையில் தன்னுடைய பாம்பை வைத்து அவர் விளையாடிக் கொண்டிருந்த போது, உணவகத்தின் மேலாளர் அந்த பெண்ணிற்கு என்ன வேண்டும் என கேட்டுள்ளார்

அந்த நேரத்தில் மேஜையில் இருந்த மலைப்பாம்பு அவரை பயங்கரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் உணவகத்தில் இருந்த ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உணவகத்திற்குள் அந்த பெண் தன்னுடைய செல்லப்பிராணியான மலைப்பாம்பை மேஜையில் வைத்து விளையாடுவது தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் பெண் எடுத்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − fourteen =

*