;
Athirady Tamil News

75 ஆண்டுகளுக்கு பின் நிறுத்தப்பட்ட இலக்கியத்துக்கான நோபல் பரிசு: காரணம் என்ன?..!!

0

உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க விருதாக கருதப்படும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு 2018-ம் ஆண்டு யாருக்கும் வழங்கப்படாது என தி ஸ்வீடன் அகாடெமி அறிவித்துள்ளது.

நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பர்ட் நோபல் மரணத்துக்குப் பின்பு அவரின் பெயரில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

மனித இனத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களித்தவர்களுக்கும் இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளிலும் பரிசு வழங்கப்படுகிறது.

இவ்விருதை தி ஸ்வீடன் அகாடெமி வழங்கி வரும் நிலையில் பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான விருது வழங்குவதும், தெரிவு செய்யப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

நோபல் பரிசு தெரிவாளர்கள் குழுவில் இருக்கும் உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது 18 பாலியல் புகார்கள் எழுந்தன.

மேலும், நோபல்பரிசு அறிவிக்கும் முன்பே அவர்களின் பெயர்களை வெளியிட்டதாகப் புகார்களும் எழுந்தன.

ஆனால், இதை அர்னால்ட் மறுத்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று காத்தரீனா பிராஸ்டென்சன் பதவி விலகக் கோரிக்கைகள் எழுந்தன.

கடந்த மாதம் 12-ம் திகதி இந்தப் புகார்கள் அனைத்தும் வெளியே பகிரங்கமானதால் கடும் எதிர்ப்புக் கிளம்பியது, தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன.

இதின் காரணமாக அகடமியின் நிரந்த செயலாளர் சாரா டேனியஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நோபல் பரிசு அகாடமிக்கு எதிராக ஸ்வீடன் முழுக்க பெரும் போராட்டம் வெடித்தது’

இதன் காரணமாக 2018-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 2019-ம் ஆண்டுடன் சேர்த்து நோபல் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு வழங்கத் தொடங்கியதில் இருந்து பாலியல், நிதிமோசடி ஆகிய காரணங்களால் இதுவரை நிறுத்தப்பட்டதில்லை.

ஆனால், முதலாம், 2-ம் உலகப்போரின் போது பரிசுகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 1914, 1918, 1935, 1940, 1941, 1942, மற்றும் 1943 ஆகிய ஆண்டுகளில் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 16 =

*