;
Athirady Tamil News

உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான பாதை எது தெரியுமா? ..!!

0

சிங்கப்பூர் மற்றும் மலேசிய தலைநகரான கோலாலம்பூர் இடையிலான விமான பாதை உலகிலே மிகவும் பரபரப்பான விமானப் பாதையாக மாறியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த OAG என்ற அமைப்பு, உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான பாதை குறித்து ஆய்வு மேற்கொண்டது.

ஒரு மணிநேரத்திற்கு எத்தனை விமானங்கள் பயணிக்கின்றன, பயணிக்கும் நேரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு வெளியாகியுள்ளது.

இதில், சிங்கப்பூர் மற்றும் மலேசிய தலைநகரான கோலாலம்பூர் இடையிலான விமான பாதை உலகிலே மிகவும் பரபரப்பான விமானப் பாதையாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பாதையில் ஒரு நாளுக்குச் சராசரியாக 84 விமானங்கள் செல்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூருக்கு இடையிலான விமான பயண நேரம் சுமார் ஒரு மணி நேரமாகும்.

2017 மார்ச் முதல் 2018 பிப்ரவரி வரையிலான காலப்பகுதியில், சிங்கப்பூர் – கோலாலம்பூர் பாதையில் 30,537 விமானங்கள் பயணித்துள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 84 விமானங்கள் பயணித்துள்ளன.

AirAsia, Jetstar, Scoot, Malindo, Singapore Airlines மற்றும் Malaysian Airline உள்ளிட்ட விமானங்கள் தான் இந்த பாதையில் பயணித்துள்ளன.

சுமார் 4 மில்லியன் மக்கள் இந்த விமானங்களில் பயணம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*