;
Athirady Tamil News

குடித்துவிட்டு பறக்கும் விமானத்தில் அட்டகாசம் செய்த பணிப்பெண்..!!

0

விமானத்தில் குடித்து விட்டு மோசமாக நடந்துகொண்ட விமானப் பணிப்பெண்ணை United flight Airlines நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது

United flight Airlines நிறுவனத்திற்கு சொந்தமான flight 4689 என்ற விமானம், Denver இல் இருந்து Willston- க்கு பயணித்துள்ளது.

இந்த விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்தவர் குடித்துவிட்டு பணிக்கு வந்துள்ளார். பயணிகள் அனைவரும் அமர்ந்திருக்கையில், அவர்கள் முன்னால் நின்றுகொண்டு அறிவுரைகளை முறையாக வழங்காமல் போதையில் தள்ளாடியுள்ளார்.

மேலும், போதை தாங்கமுடியாமல் விமானம் பயணித்துக் கொண்டிருக்கையில், அங்கிருந்த பயணிகள் மீது விழுந்து அட்டகாசம் செய்துள்ளார், இதனை பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

இதுகுறித்து பயணிகளிடம் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர், இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்திறக்க நிர்வாகம் பயணிகள் அனைவரிடமும் மன்னிப்பு கோரியுள்ளது.

பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் நாங்கள், இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காவண்ணம் பார்த்துக்கொள்கிறோம் என மன்னிப்பு கோரியுள்ளது.

மேலும், விமானத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்கியதோடு மட்டுமல்லாமல் பணிப்பெண்ணையும் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*