;
Athirady Tamil News

வாழ்வை சீர்குலைப்பவர்களுக்கு பொலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன்? மதிராஐ் கேள்வி..!!

0

யுத்தம் நிறைவுக்கு வந்து பல ஆண்டுகள் புரண்டு ஓடிய பின்பும் அண்மைக்காலமாக நடை பெற்றுவரும் வால்வெட்டு சம்பவங்கள் தமிழ் மக்களினது சுகந்திரமான வாழ்விற்கு முட்டுகட்டை போடுவதாக அமைந்துள்ளதுடன் பலரது வாழ்வியலை சிதைத்துள்ளது அத்துடன் உளவியல் ரீதியாகவும் பாதிப்புள்ளாகி உள்ளனர் யாழ்ப்பாணத்தை அதுவும் குறிப்பாக கொக்குவில் கோப்பாய் பகுதிகளை மையமாக வைத்து இந்த வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெறுவது ஏன்?

கடந்த ஒரு கிழமைக்குள் மாத்திரம் நல்லூர்பிரதேசசபை பகுதிக்குல் உற்பட்ட பிரதேசத்தில் மாத்திரம் நான்கு வால்வெட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதை அறிய முடிகின்றது இவை மக்களிற்கு மிகுந்த வேதனையை பரிசளிக்கின்றன..

எனவே இது தொடர்பான சட்டவிரோத செயலில் இருந்து பொது மக்களை பாதுகாக்கவும் அவர்களின் சுகந்திரமான வாழ்வை உறுதிப்படுத்தவும் யாழ்மாவட்ட பொலீஸ் பொறுப்பதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் பொது மக்களிற்கு நல்லாட்சி அரசாங்கம் மீது நம்பிக்கை அற்ற தன்மை ஏற்படவழிவகையாக அமையலாம் என சுதேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயளாலர் சந்தானகோபால் மதிராஐ் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 8 =

*