;
Athirady Tamil News

போதைப்பொருளுடன் சிறைச்சாலைக்கு வந்தவர் கைது..!!

0

வாரியபொல சிறைச்சாலைக்கு ஹொரோயின் மற்றும் அய்ஸ் எனும் போதைப்பொருளை கொண்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை கைதி ஒருவரை பார்வையிட வந்த ஒருவரை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்ட போதே இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடமிருந்து 33 கிராம் 230 மில்லிகிராம் ஹொரோயினும் 35 கிராம் 140 மில்லிகிராம் அய்ஸ் எனும் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரை வாரியபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 7 =

*