;
Athirady Tamil News

கடைசி இடத்தில் இருந்து தப்பிப்போமா…. பஞ்சாபுடன் மோதும் ராஜஸ்தான் புலம்பல்..!! (வீடியோ)

0

தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வலுவான பஞ்சாப் அணியுடன் மோதுகின்றது. தோல்வியை தவிர்ப்பதுடன், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்கும் முனைப்பில் ராஜஸ்தான் உள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 39 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

ஹைதராபாத் அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது இடத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த சீசனின் 40வது ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடக்கிறது. இதில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

தோல்வியை தவிர்க்குமா ஐபிஎல் முதல் சீசனில் சாம்பியனான ராஜஸ்தான் அணி, இந்த சீசனில் துவக்கம் முதலே திணறி வருகிறது. இதுவரை 3 வெற்றிகளை மட்டும் பெற்றுள்ளது. 6 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் களமிறங்குகிறது. powered by Rubicon Project மீண்டும் மோதுகின்றன நேற்று முன்தினம் இந்தூரில் நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் விளையாடின. அதில் பஞ்சாப் அணி அபாரமாக வென்றது. இரண்டாவது முறையாக மீண்டும் மோத உள்ளன.

தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் வெற்றியை எதிர்பார்க்கிறது ராஜஸ்தான். வெற்றிக்காக போராட்டம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக ராஜஸ்தான் கடுமையாக போராட வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் தொடர் தோல்விகளை தவிர்ப்பதுடன், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க, மற்றொரு வெற்றி அதற்கு தேவை. மீண்டும் இன்று மோதல் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறுவதற்காக பஞ்சாப் அணி முழு வேகத்தில் இறங்கும். அதே நேரத்தில் தோல்வியை தவிர்க்க, ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு துவங்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் போராடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 11 =

*