;
Athirady Tamil News

2019 தேர்தலில் பாஜக வீழ்ச்சி அடையும், நான் பிரதமர் ஆவேன்- ராகுல் பரபரப்பு பேச்சு..!!

0

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று அவர் 9-வது கட்டமாக பிரசாரம் செய்தார். பெங்களூரில் இன்று காலை முக்கிய பிரமுகர்கள் மற்றும் மூத்த குடிமக்களை ராகுல்காந்தி சந்தித்தார்.

பல முக்கியமான வி‌ஷயங்களில் பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். ரபெல் விமான ஒப்பந்தம் குறித்து அவர் இதுவரை வாய் திறக்கவில்லை. அரசியல் சாசன அமைப்புகளை பா.ஜனதா தொடர்ந்து குறி வைத்து வருகிறது.

ஊழல் வழக்கில் சிறை சென்ற எடியூரப்பாவை பா.ஜனதா முதல்வர் வேட்பாளராக அறிவித்தது ஏன்? ரெட்டி சகோதரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன்? இது பற்றி பிரதமர் மோடியிடமும், அமித்ஷாவிடமும் கர்நாடக மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கான பதிலை எதிர்பார்க்கிறார்கள்.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா கொலைகுற்றம் சாட்டப்பட்டவர்.

மோடி முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வீழ்ச்சி அடையும். இந்த தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் பிரதமர் ஆக நான் தயார்.

நான் தேர்தல் பிரசாரத்தில் பிரச்சனைகளை முன் வைத்து பேசிக்கொண்டு இருக்கிறேன். ஆனால், பிரதமர் மோடி என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்.

நாங்கள் முன்வைக்கும் பிரச்சனைகள் குறித்து அவர் எந்த பதிலும் கூறுவதில்லை.

செல்போனில் ஒர்க்கிங் மோடு, ஏரோபிளேன் மோடு, ஸ்பீக்கர் மோடு என 3 மோடுகள் இருக்கும்.

ஆனால், மோடி எப்போதுமே ஸ்பீக்கர் மோடு, ஏரோபிளேன் மோடு ஆகியவற்றை மட்டும்தான் பயன்படுத்துகிறார். ஒர்க்கிங் மோடை பயன்படுத்துவதில்லை.

என்னுடைய பேச்சை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். நான் மோடியை பற்றி பேசும் போது எல்லாம் பிரச்சனைகளை மையமாக வைத்து அவருக்கு கேள்வி எழுப்புகிறேன்.

அதே நேரத்தில் அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் எனது பேச்சு இருக்கும். நரேந்திர மோடி 70 வயதை நெருங்கி கொண்டு இருக்கிறார். நான் எப்போதுமே மூத்தவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவன்.

பாரதிய ஜனதா கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினால் அது சம்பந்தமாக மோடி இது வரை பதில் அளிக்கவில்லை.

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

ராகுல்காந்தி முதல் முறையாக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமர் ஆவேன் என்று தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Congress #RahulGandhi

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*