;
Athirady Tamil News

குப்பை கூடமாக மாற்றம் பெற்ற மலையக மைதானங்கள்: மேதின கூட்டத்தால் வந்த வினை..!! (படங்கள்)

0

மலையகத்தின் முக்கிய இரு கட்சிகள் மேதின கூட்டங்கள் நடத்திய மைதானங்கள், கூட்டத்தின் பின்னர் குப்பை கூடமாக காட்சியளித்தமை அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

தலவாக்கலை நகர சபை பொது மைதானத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டமும், நுவரெலியா மாநகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின கூட்டமும் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, குறித்த கூட்டங்களில் கலந்து கொண்ட ஆதரவாளர்களால் வீசப்பட்ட பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல்கள், பேப்பர், யோகட் கப் போன்ற கழிவு பொருட்கள் மைதானத்தில் நிரம்பி வழிந்தது.

இவ்வாறு நிரம்பி வழிந்த குப்பைகளை அப்பகுதியில் உள்ள, நாய், கோழி, போனி போன்ற உயிரினங்கள் சாப்பிடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வாறான கூட்டங்களின் போது ஆதரவாளர்களுக்கு குறித்த பொருட்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டுமென சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும், இவ்வாறு காட்சியளிக்கப்பட்ட கழிவு பொருட்கள் தலவாக்கலை நகர சபை ஊழியர்களால் இன்று சுத்தம் செய்யப்பட்டு அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*