;
Athirady Tamil News

பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக 159 ஓட்டங்களை நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி..!!

0

ஐபிஎல் போட்டித் தொடரின் தற்போது இடம்பெற்று வரும் 40வது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 159 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையில்சவாய் மான்சிங் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 158 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் 82 ஓட்டங்களை குவித்தார்.10 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஹன்ரூ டை 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 5 =

*