;
Athirady Tamil News

பாடசாலை மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபருக்கு நேர்ந்த கதி..!! (சிசிடிவி காணொளி)

0

கடந்த 28ம் திகதி குளியாபிட்டி திஸ்ஸ மாவத்தையில் மலியதேவ பாடசாலையின் மாணவரொருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பிரதேச சபை வேட்பாளர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயதுடைய மாணவர் ஆகியோர் எதிர்வரும் 11ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குளியாபிட்டி நீதவான் நீதிமன்றில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு குறித்த மாணவரை தாக்கிய பிரதேச சபை வேட்பாளர் மாணவரை தாக்கிய பின்னர் தப்பிச்சென்றிருந்த நிலையில் இன்று சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்தார்.

இந்த நிலையில் , எதிர்வரும் 11ம் திகதி வரையில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை , குறித்த மாணவரை தாக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*