;
Athirady Tamil News

சீனாவில் ஆட்சி கவிழ்ப்புக்கு முயன்ற முன்னாள் உயரதிகாரிக்கு ஊழல் வழக்கில் ஆயுள் தண்டனை..!!

0

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுவில் உயர்மட்ட தலைவராக முன்னர் பொறுப்பு வகித்தவர் சன் செங்காய்(54). சீனாவின் அதிபராக இவர் பதவி ஏற்கக்கூடும் என கருதப்பட்ட நிலையில், ஜி ஜின்பின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், சோங்கிங் நகராட்சி நிர்வாக முன்னாள் தலைவராக இருந்த இவர் 170 மில்லியன் யுவான் (26.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) லஞ்சமாக பெற்றதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணையில் கடந்த 2002 மற்றும் 2017-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தனது பல்வேறு பதவி அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி பல நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் சலுகைகளை அளித்து லஞ்சமாக இவர் பணப்பலன்களை பெற்றது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில் டியான்ஜின் நகராட்சிக்கு உட்பட்ட மக்கள் நீதிமன்றம் சன் செங்காய்-க்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

வாழ்நாள் முழுவதும் அரசியல் மற்றும் பொது வாழ்வில் ஈடுபடவும் தடை விதித்த நீதிமன்றம், இவருக்கு சொந்தமான சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதில்லை என சன் செங்காய் தெரிவித்துள்ளார். #TopChineseofficial #lifeterm #graftcase

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 8 =

*