;
Athirady Tamil News

கிரிக்கெட் வீரர் ஷர்குல் தாகூரின் பெற்றோர் சாலை விபத்தில் காயம் – மருத்துவமனையில் அனுமதி..!!

0

இந்திய கிரிக்கெட் அணியில் மிதவேகப் பந்துவீச்சாளராக உள்ள ஷர்குல் தாகூர், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அவரது பெற்றோர் நரேந்திர தாகூர் – ஹன்சா தாகூர் மராட்டிய மாநிலம் பால்கர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு அவரது பெற்றோர், திருமண வீட்டுக்கு சென்று மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தனர். திடீரென எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் தடுமாறியதில், அவர்கள் இருவரும் கீழே விழுந்தனர். இதில், இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஷர்குல் தாகூரும் தனது பெற்றோரை போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். #ShardulThakur

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*