;
Athirady Tamil News

அரசு பள்ளியை சீரமைக்க ரூ.25 லட்சம் நிதி வழங்கிய மத்திய மந்திரி..!!

0

டெல்லியின் வடகிழக்கில் உள்ள முஸ்தபாபாத் நகரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளிக்கு மத்திய மந்திரி விஜய் கோயல் நேற்று சென்றார். அங்கு சென்ற அவர், பள்ளி நடக்கும் விதம் குறித்தும், மாணவர்கள் பாடம் கற்கும் விதம் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து, அரசு பள்ளியை சீரமைக்கும் விதமாக, 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில். அரசு பள்ளியில் மாணவர்கள் படிக்கும் நிலை அறிந்து என் கண்கள் குளமாகின. இதுபோன்ற நிலையை மாற்ற மாநில அரசு முன்வர வேண்டும். இதுபோல் உதவி செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

அரசு பள்ளிக்கு நிதி வழங்கிய மத்திய மந்திரியின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். #Delhi #GovernmentSchool #VijayGoel

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 12 =

*