;
Athirady Tamil News

ஈ.பி.ஆர்.எல்.எப் மாவட்ட பொறுப்பாளர் மீது தாக்குதல்..!!

0

ஈ.பி.ஆர்.எல்.எப் மாவட்ட பொறுப்பாளர் மீது தாக்குதல்!!படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் க. பரமேஸ்வரன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியா நெளுக்குளத்தில் இரும்பகம் ஒன்றினை நடத்திவருபவரும் முன்னாள் டெலோ உறுப்பினருமான ஒருவரும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வவுனியா அலுவலகத்தில் பணிபுரிபவரும் ஈ.பி.ஆர்.எல்.எப் வவுனியா மாவட்ட பொறுப்பாளரை தொலைபேசி மூலமாக கலந்துரையாடுவதற்காக அழைத்துள்ளனர்.
மாவட்ட பொறுப்பாளர் என்ற வகையிலும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் என்ற ரீதியிலும் மக்கள் குறைபாடுகளை சுட்டிக்காட்ட முனைகின்றனர் என எண்ணி அவர்கள் அழைத்த இடத்திற்கு க. பரமேஸ்வரன் சென்றுள்ளார்.

எனினும் அவர்கள் பரமேஸ்வரன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் படு காயமடைந்தவரை அங்கிருந்த பொது மக்கள் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

இந் நியைலில் வவுனியா பொது வைத்தியாசலை பொலிஸார் முறைப்பாட்டை பதிவு செய்து வவுனியா பொலிஸாரின் மூலமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் தாக்குதலை மேற்கொண்ட இரும்பகம் வைத்துள்ள முன்னாள் டெலோ உறுப்பினர் அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஆசன பங்கீடுகள் தொடர்பாகவும் அதன் பின்னர் நகரசபை மற்றும் பிரதேசசபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் தமிழ் கட்சியொன்றின் சார்பில் பேச்சுக்களை வாடி வீட்டில் நடத்தி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*