இளம் பெண்ணின் காதில் புகுந்த கரப்பான் பூச்சி: அதன் பின்ன என்ன நடந்தது தெரியுமா?..!!

அவுஸ்திரேலியாவில் இளம் பெண்ணின் காதில் கரப்பான பூச்சி புகுந்ததால், 9 நாட்களுக்கு பிற்கு அகற்றப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்தவர் Katie Holley. கடந்த மாதம் இவர் தூங்கிக் கொண்டிருந்த போது காதில் ஏதோ ஒன்று நுழைவது போன்று இருந்துள்ளது.
உணர்ந்த அந்த பெண் கணவிழித்து பார்த்த போது ஒன்றும் புரியாமல் அவதிப்பட்டுள்ளார். தொடர்ந்து காதில் பிரச்சனை இருந்து வந்தால், அவர் 9 நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காதில் கரப்பான பூச்சி இருப்பதை கண்டுள்ளனர். அதன் பின் அது வெளியேற்றுவதற்கான உரிய திரவத்தை காதின் வழியே ஊற்றியதால், கரப்பான் பூச்சி ஒரு வழியாக வெளியே வந்தது.
இது குறித்து அப்பெண் கூறுகையில், முதலில் காதில் ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்தேன், அதன் பின் மருத்துவரை அணுகிய பின்பு தான் கரப்பான பூச்சி இருப்பதை அறிந்தேன். தற்போது நலமாக இருப்பதாக கூறியுள்ளார்