;
Athirady Tamil News

பிரித்தானிய இளவரசர் ஹரியுடன் திருமணம்: மோர்க்கல் அணியப் போகும் திருமண ஆடையின் விலை தெரியுமா?..!!

0

பிரித்தானியா இளவரசர் ஹரி, அமெரிக்க நடிகையான மேகன் மோர்க்கலை வரும் 19-ஆம் திகதி கரம் பிடிக்கவுள்ளார். இவர்களின் திருமணத்தை பிரித்தானியா மக்கள் பெரும் ஆவலும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் இவர்கள் திருமணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், திருமண உடைகள் மற்றும் கேக் போன்றவைகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்த திருமணத்திற்கு மேகன் மோர்க்கல் அணியப் போகும் திருமண ஆடை தயாராகிவிட்டதாகவும், அதை பிரித்தானியா வடிவமைப்பாளர் Ralph & Russo வடிவமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கையால் மட்டுமே தைக்கப்பட்ட இந்த ஆடையின் விலை சுமார் £100,000 பவுண்ட் ஆகியுள்ளதாகவும், இதை இளவரசர் குடும்பம் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

100 மணி நேரத்திற்கு மேலாக தைக்கப்பட்ட இந்த ஆடையில் முத்து மணிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரித்தானியாவின் மிக முக்கியமான திருமணம் என்பதால், அவரது ஆடையைப் பற்றி ரகசியம் அதிகம் காக்கப்படும் எனவும் திருமண நாள் அன்று மட்டுமே அதைப் பற்றிய விவரம் தெரியவரும் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − one =

*