;
Athirady Tamil News

வவுனியாவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தை தேடும் கடற்படையினர்..!! (படங்கள்)

0

வவுனியா கூமாங்குளம் பகுதியில் காணி ஒன்றில் விடுதலைப்புலிகளால் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கற்படையினர் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா கூமாங்குளம் சின்னம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள தனியாருக்கு சொந்தமான காணியிலேயே அகழ்வுப்பணிகள் மெற்கொள்ளப்பதுடன், அப்பகுதியில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் கடற்பiயினரின் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

கொழம்பில் அமைந்துள்ள இலங்கை கடற்படையின் தலைமை செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து அனுராதபுரம் பூனாவ கடற்படை முகாமைச் சேர்ந்த படையினர் வவுனியா பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வவுனியா நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று நேற்று (08) மாலை 4.30 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரை குறிப்பிட்ட ஒரு பகுதியில் பத்து அடி ஆழம் வரைக்கும் அகழ்வு பணிகள் நடைபெற்றிருந்தது. இருந்தபோதும் எந்தவொரு பொருளும் கிடைக்காத நிலையில் இன்று (09) தொடர்ந்து அகழ்வுப்பணிகளை மேற்கொள்ள கடற்படையினர் தீர்மானித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − two =

*