;
Athirady Tamil News

மைத்­தி­ரி­யின் கீச்சகப் பக்­கத்­தில் புகுந்து அவ­ருக்கே ஆலோ­சனை..!!

0

அரச தலை­வர் மைத்­தி­ரி­யின் ஊட­கப் பிரிவு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வது போன்ற கீச்­ச­கப் (ருவீற்

றர்) பதி­வால் அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் நேற்­றுப் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. சில நிமி­டங்­க­ளில் அந்­தப் பதிவு நீக்­கப்­பட்­டது. அரச தலை­வ­ரின் ஊட­கப் பிரி­வுக்­குள் ஊடு­ரு­விய ‘ஆசாமி’ ஒரு­வரே அதைப் பதி­விட்­டுள்­ளார் என்­றும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால தனது கீச்­ச­கத்­தில் நாடா­ளு­மன்­றில்­தான் ஆற்­றிய கொள்கை விளக்க உரை­யின் ஒரு பகு­தி­யைப் பதி­விட்­டார். அந்­தப் பதி­வுக்கு பதி­ல­ளித்து அரச தலை­வ­ரின் ஊட­கப் பிரிவு கீச்­ச­கத்­தால் ஒரு பதிவு பதி­வேற்­றப்­பட்­டது.

“நீங்­கள் சிறந்த பேச்­சா­ளர். ஆனால் உங்­க­ளால் தெரி­விக்­கப்­ப­டும் கருத்­துக்­களை எவ்­வாறு உறு­திப்­ப­டுத்­து­வீர்­கள். செய­லில் காட்­டுங்­கள்” என்று அதில் குறிப்­பிட்­டி­ருந்­தது. இது அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

சில நிமி­டங்­க­ளில் இந்­தப் பதிவு நீக்­கப்­பட்­டது. இது தொடர்­பில் விளக்­க­ம­ளித்­துள்ள அரச தலை­வர் ஊட­கப் பிரிவு, அரச தலை­வர் ஊட­கப் பிரி­வின் கீச்­ச­கத்­துக்­குள் ஊடு­ரு­விய ‘ஆசாமி’ ஒரு­வரே அதைப் பதி­விட்­டுள்­ளார் என்று தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பில் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது என்­றும் தெரி­வித்­துள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 20 =

*