ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் நினைவிடத்தை சுற்றுலா தலமாக மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு..!!

1925-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நிறுவிய கேஷவ் பாலிராம் ஹெட்கேவார் நினைவிடம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஸ்மிருதி மந்திர் என்ற பெயரில் அமைந்துள்ளது. இதற்கு சுற்றுலா தலம் அந்தஸ்து வழங்கி மாகாராஷ்டிரா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விஜயதசமி கொண்டாட்டங்களின் போது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்வையிட வருவதை மேற்கோள் காட்டி”நாக்பூர் தர்ஷன்” என்ற பெயரில் ஸ்மிருதி மந்திர் சுற்றுலா தலங்கள் பட்டியலில் சி-கிரேடில் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே நாக்பூர் நகராட்சி ஸ்மிருதி மந்திரை மேம்படுத்த 2017-18 நிதியாண்டில் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. #RSSmemorial #Hedgewar