;
Athirady Tamil News

திருவள்ளூர் அருகே சென்னை வருவாய் ஆய்வாளர் அடித்து கொலை..!!

0

சென்னை, ராயப்பேட்டை, லாயர்ஸ் காலனியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 48). சென்னை கலெக்டர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் பிரிவில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 2-ந் தேதி திருவள்ளூர் அருகே உள்ள மணவாளநகரில் மாந்தோப்பு ஒன்றை விலைக்கு வாங்குவது தொடர்பாக அந்த இடத்தை பார்க்க சென்றார்.

அப்போது மாந்தோப்பில் 2 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அவர்கள் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தாக்கினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்து தப்பி வந்த பாலாஜி இது தொடர்பாக மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். பின்னர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் உடலில் பலத்த காயம் அடைந்த பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மேலும் உடல்நிலை மோசமானது.

இதையடுத்து பாலாஜியை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பாலாஜியை தாக்கியவர்கள் யார்? என்ற விபரம் தெரியவில்லை. அவர்களை பற்றி மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*