;
Athirady Tamil News

அமெரிக்க விஞ்ஞான கண்காட்சிக்கு 4 மாணவர்கள் தெரிவு..!!

0

அமெரிக்காவின் இன்டல் நிறுவனத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு இலங்கை பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட இளம் மாணவர்கள் 4 பேர் அமெரிக்கா பயணமாகின்றார்கள்.

அமெரிக்கா பயணமாகும் குறித்த மாணவர்களுக்கான பயணச்சீட்டை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று காலை அமைச்சின் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

அமெரிக்காவின் இன்டல் நிறுவனத்தின் விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சி எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை பெனின்சுலா நகரில் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியில் சர்வதேச ரீதியாக 72 நாடுகளை சோந்த 1,700 மாணவர்கள் கலந்து கொள்கின்றார்கள்.

2007ஆம் ஆண்டு முதல் இலங்கை மாணவர்கள் தொடர்ச்சியாக இதுவரை இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதுடன், போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.

இலங்கை பொறியியலாளர் கல்வியகம் வருடங்தோறும் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களை தெரிவு செய்து இரண்டு கட்டமாக போட்டிகளை நடாத்தி, வெற்றி பெறுகின்ற மாணவர்களை வருடந்தோறும் அமெரிக்காவில் நடைபெறுகின்ற கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு தெரிவு செய்கிறது.

கிம்ஹான் விஜேவர்தன (சென் அன்தனிஸ் கல்லூரி கண்டி), கஜிந்து பண்டார (சென் அன்தனிஸ் கல்லூரி கண்டி), சுபுன் சில்வா (டெமகினோன் கல்லூரி கந்தானை), ருமல் இந்துவர (ஆனந்த தேசிய கல்லூரி புத்தளம்) ஆகிய நான்கு மாணவர்களே இந் நிகழ்விற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் நால்வரும் எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கையில் இருந்து பயணமாகின்றார்கள்.

கண்காட்சி தொடர்ந்து ஜந்து நாட்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 12 =

*