;
Athirady Tamil News

அதிபரின் நெருக்கீட்டால் ஆசிரியை தற்கொலை: அதிபர் தண்டிக்கப்பட வேண்டும்..!!

0

அதிபரின் நெருக்கீட்டால் ஆசிரியை தற்கொலை அதிபர் தண்டிக்கப்பட்ட வேண்டும்.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை.

யாழ்ப்பாணம் புறநகர்ப்பகுதியில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய ஆசிரியை ஒருவருக்கு அதிபர் கொடுத்த நெருக்கீடுகளால் அவ்வாசிரியை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நெருக்கீட்டின் காரணமாக வேறுஒரு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற அவ்வாசிரியரை தனது பாடசாலைக்கு மாலை வேளை வந்து கற்பிக்கவேண்டும் என்று முன்னைய அதிபர் நெருக்கீடுகள் கொடுத்ததோடு, சம்பள ஏற்றப் படிவத்தை வழங்காது தடுத்து நிறுத்தியும் உள்ளார். இது தொடர்பில் குறித்த ஆசிரியை இது தொடர்பில் வலயக் கல்வித் திணைக்களத்தில் முறையிட்டும் எந்தப் பயனும் இன்றி ஆசிரியை மரணத்தைத் தழுவியுள்ளார்.

ஏற்கனவே வலயத்தின் கல்விப்பணிப்பாளராக இருந்தவரிடமும் இவ்வாசிரியை முறைப்பாடுகள் செய்தார் என்றும். அதற்காக அவ்வாசிரியர் வலயக் கல்விப்பணிப்பாளரால் எச்சரிக்கப்பட்டார் என்பதும் மறைத்து வைக்கப்பட்ட உண்மை.

ஏற்கனவே இப்பாடசாலையில் கடமையாற்றிய இன்னுமொரு ஆசிரியை படுமோசமாக இவ்வதிபரால் பாதிக்கப்பட்டு வேறுபாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றமையும், அதிபர் பல தடவைகள் இனரீதியிலான விதண்டாவாதக் கருத்துக்களை முன்வைப்பவர் என்பதும் அறியப்படுகின்றது. அவ்வாறே அங்கு கடமையாற்றுகின்ற ஆண் ஆசிரியர் ஒருவரை அதிபர் மாணவர்கள் முன்னிலையில் தாக்க முற்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

ஆகையால் குறித்த அதிபர் மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்துகின்ற போலியான விசாரணைகளை நிறுத்தி, மாகாணக் கல்வி அமைச்சு நேரடியாக விசாரணை நடாத்தி, அதிபருக்கு உச்ச தண்டனை வழங்கி, இறந்து போன ஆசிரியையின் ஆத்மா சாந்திபெற உதவவேண்டும்.

இல்லையேல் குறித்த பாடசாலையில் உள்ள அனைத்துத் தமிழ் ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 8 =

*