;
Athirady Tamil News

ஒரே இலக்­கத்­தில் – இரு வாக­னங்­கள்..!!

0

ஒரு பதிவு இலக்­கத்­தில் இரு வாக­னங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை தொடர்­பில் யாழ்ப்­பா­ண பொலிஸ் சிறப்பு விசா­ர ணைப் பிரி­வி­ன­ருக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.சம்­ப­வம் தொடர்­பாக தெரி­ய­வ­ரு­வ­தா­வது:

யாழ்ப்­பா­ணம் வள்­ளிக்­க­ரை­யைச் சேர்ந்த அ.ஜான்­சன் என்­ப­வர் கண்­டி­யில் உள்ள சிய­பத பினான்ஸ் நிதி நிறு­வ­னம் ஒன்­றின் மூலம் சிபிஜே ஆர்4118 என்ற இலக்­கத்தை உடைய டொல்­பின் ரக வாக­ன­மொன்றை கடன் அடிப்­ப­டை­யில் பெற்­றுள்
ளார்.

இவர் தன்­னு­டைய வாகன வரிப்­ப­ணத்தை கட்­டு­வ­தற்­காக சென்­ற­பொ­ழுது இவ­ரு­டைய பதிவு இலக்­கத்­தில் ஏற்­க­னவே பணம் கட்­டப்­பட்டு பதிவு இலக்­கம் வெளி­யி­டப்­பட்­டமை தொடர்­பாக அறி­யப்­பட்­டதை அடுத்து யாழ்ப்­பா­ணம் சிறப்­புக் குற்­றப் பொலிஸ் பி­ரி­வில் முறைப்­பாடு செய்­துள்­ளார்.

முறைப்­பாட்­டுக்­க­மைய பொலி­ஸா­ரின் தீவிர விசா­ர­ணை­க­ளில் இந்த இலக்­கத்­தில் டபிள்யூபிஜேஆர் 4118 கொழும்­பில் வாக­ன­மொன்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்டு இரு வாக­னங்­க­ளும் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து வைக்­கப்­பட்டு வழக்­குத் தொட­ரப்­பட்­டுள்­ளது.

முதற்­கட்ட விசா­ர­ணை­ க­ளில் கொழும்பு பதி­வில் உள்ள வாக­னப் பதிவே ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தா­க­வும் கண்­டிப் பதி­வில் உள்ள வாக­னம் ஏற்­க­னவே கை மாற்­றப்­பட்­டுள்­ள­தா­க­வும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக சரி­யானகுற்­ற­வா­ளி­களை வெகு விரை­வில் பொலி­ஸார் கைது செய்ய இருப்­ப­தாகப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*