;
Athirady Tamil News

யாழ் மாந­கர முதல்­வருக்கு- மாதாந்தம் அவசர தேவைகளுக்கு 5 இலட்சம் ரூபா..!!

0

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் முதல்­வர் உச்ச எல்­லைப் பண­மாக 5 இலட்­சம் ரூபா வரை­யில் அவ­சர தேவை­க­ளுக்­குச் செலவு செய்­ய­லாம் என்று அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் அமர்வு மாந­கர முதல்­வர் இ.ஆர்­னோல்ட் தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் சபைக்­கான நிலை­யி­யல் குழுக்­கள் நிய­மித்­தல் மற்­றும் சபை அங்­கீ­கா­ரம் பெறாது முதல்­வர் அவ­சர நிலை­யில் செல­வ­ழிக்­கக் கூடிய உச்ச எல்லை நிதி தொடர்­பா­க­வும் ஆராய்­யப்­ப­டது. இதில் பல உறுப்­பி­னர்­க­ளும் தமது கருத்­து­களை முன்­வைத்­த­னர்.

அனைத்து உறுப்­பி­னர்­க­ளின் கருத்­துக்­க­ளை­யும் கேட்­ட­றிந்த பின்­னர் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் உறுப்­பி­னர் மணி­வண்­ணன் முன்­வைத்த முன்­மொ­ழிவை அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொண்­ட­னர்.

அவர் தனது முன்­மொ­ழி­வில் மாதாந்­தம் ஒரு­முறை அவ­சர தேவை ஏற்­ப­டும் போது மாந­கர முதல்­வர் செலவு செய்­யக் கூடிய அதி­யுச்ச தொகை­யாக 5 இலட்­சம் ரூபா­யும், மாந­கர சபை­யின் ஆணை­யா­ளர் அதி­யுச்ச தொகை­யாக ஒரு இலட்­சத்து 25 ஆயி­ரம் ரூபா வரை­யும் செலவு செய்ய முடி­யும். அதற்கு நாம் அனு­மதி கொடுப்­போம் என்­றார்.

ஏனைய உறுப்­பி­னர்­க­ளும் அதனை ஏற்­றுக்­கொண்­ட­னர்.மேலும் குறிப்­பிட்ட தொகைக்கு அதிக நிதி தேவைப்­ப­டும் பட்­சத்­தில் சபை­யின் அமர்­வில் அங்­கீ­கா­ரத்­துக்­கா­கச் சமர்ப்­பித்து தேவை­யான நிதி­யைப் பெற்­றுக் கொள்­வது என முடிவு செய்­யப்­பட்­டது. அத்­து­டன் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் நிதிக் குழு­வால் செலவு செய்­யக்­கூ­டிய அதி உச்ச தொகை­யாக பத்து இலட்­சம் ரூபா வரை தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − nine =

*