;
Athirady Tamil News

சொகுசு வாழ்க்கைக்காக பிரித்தானிய மகாராணி பெயரில் மோசடி: குடும்பத்திற்கு சிறை..!!

0

பிரித்தானியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக பிற நாட்டு மக்களை கொத்தடிமையாக பயன்படுத்திய குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதுவும், பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் பெயரை சொல்லி அந்த மக்களை ஏமாற்றியுள்ளனர்.

Ringleader Roman Rafael மற்றும் அவரது மனைவி wife Angelika Chec, ரோமனின் சகோதரர்கள் Roman Rafael மற்றும் Marian Rafael ஆகியோர் குற்றசெயலில் ஈடுபட்டுள்ளனர்.

Slovakia மற்றும் Czech Republic ஆகிய நாடுகளில் இருந்து வறுமையில் வாடும் மக்களை பிரித்தானிய நாட்டிற்கு தொழிலுக்காக ஏஜென்ஸி மூலம் இவர்கள் அழைத்து வருகிறார்கள்

கார்களை துடைப்பது, உணவு தொழிற்சாலை போன்ற இடங்களுக்கு இவர்களை அதிக நேரம் வேலைக்கு அனுப்பி அதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தில், அதிகமான தொகையை இவர்கள் எடுத்துக்கொண்டு, குறைந்த ஊதியத்தையே வழங்கியுள்ளார்கள்.

மேலும், இவர்கள் தங்குவதற்கு சிறிய இடங்களை ஒதுக்கிகொடுத்ததோடு மட்டுமல்லாமல், பழைய உணவுகளை இவர்களுக்கு சாப்பிடக்கொடுத்து கொத்தடிமை போல நடத்தியுள்ளார்கள்.

இந்த கொத்தடிமைகள் மூலம் கிடைக்கும் பணத்தினை வைத்து நகைகள், சுற்றுலா, Audi Q7 என சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி இவ்வாறு அழைத்து வரும் மக்களிடம், நீங்கள் பிரித்தானிய மகாராணிக்காக வேலை பார்க்கிறீர்கள்.

அற்காகத்தான், பிரித்தானிய நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளீர்கள் என பொய் கூறியுள்ளனர். இதனை நம்பிய அந்த மக்களும், நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், அழுகிப்போன உருளைக்கிழங்கில் செய்யப்பட்ட சமையல், தங்குவதற்கு போதிய வசதி கூட கொடுக்காமல் தங்களை துன்புறுத்தியதாக கூறினர்

மேலும், நாங்கள் பிரித்தானிய மகாராணிக்காக இவ்வாறு வேலை பார்க்கிறோம் என நினைத்துக்கொண்டிருந்தோம், இதனைத்தான் அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கிரவுன் நீதிமன்றம், தம்பதியினருக்கு 8 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் சகோதரர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 10 =

*