;
Athirady Tamil News

தகவல் அறியும் சட்டம் தொடர்பில் சர்வதேச செயலமர்வு..!!

0

தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை பலப்படுத்தும் நோக்கில் நோர்வே தூதரகத்தின் உதவியோடு இலங்கை பத்திரிகை நிறுவனம் ஏற்பாடு செய்த இரு நாள் செயலமர்வு இன்று ( புதன்கிழமை) நிறைவடைந்தது.

இந்த சர்வதேச செயலமர்வு ஏழு அமர்வுகளைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த செயலமர்வுகளில் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், அரச அதிகாரிகள், சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செயலமர்வின் இறுதி நாளான இன்று இலங்கை தகவல் அறியும் சட்டத்தின் உரிமைகள் தொடர்பில் அதற்கான ஆணைக்குழுவின் திறந்த அமர்வொன்று நடைபெற்றுள்ளது. இது தவிர விசேட பிரதிநிதிகளின் அறிக்கையொன்றும் இன்றைய நாள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 17 =

*