;
Athirady Tamil News

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை..!!

0

தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனமல்வில – ஹம்பேகமுவ வீதியில் தனமல்வில நகரிலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள குறுக்கு வீதி ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (09) மாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கிரிவெவ, செவனகல பகுதியை சேர்ந்த சிசிர குமார எனும் 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் வட்டிக்கு பணம் வழங்குபவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பிரேத பரிசோதனைகள் இன்று (10) நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 16 =

*