;
Athirady Tamil News

வவுனியாவில் சிங்கள மாணவர்களின் கல்வி நடவடிக்கையை குழப்பும் சிங்கள உறுமய?..!! (படங்கள்)

0

வவுனியா வளாகத்தின் பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மதவாதத்தை தூண்டி குழப்பி வருவதாக வளாகத்தின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறாது அப்பாவி சிங்கள மாணவர்களை வளாகத்தில் புத்தர் சிலை வைக்க தூண்டிய குறித்த மதவாத சக்தி மேற்கொண்ட இந்த முயற்சியை பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. இதன் போது குறித்த மதவாத கட்சியை சேர்ந்த சிங்கள மாணவர்களால் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டது. பார்க் வீதியிலுள்ள வளாக அலுவலகத்தின் வாயில் கதவைப் பூட்டி சிங்கள மாணவர்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன் அரச புலனாய்வாளர்களால் பல்கலைக்கழகத்தின் ஊழியர்களை வெளியேறவிடமால் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் பதற்ற நிலை ஏற்பட்டு வவுனியா வளாகம் காலவரையரையின்றி மூடப்பட்டது.

அதனையடுத்து இவ் குழுப்பத்திற்கு காரணமான மாணவர்களுக்கு எதிராக நிர்வாகம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள தயாரான நிலையில் அதனை நிறுத்துமாறு கோரியே இன்று (10.05.2018) காலை 10.00 மணிமுதல் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 100க்கு மேற்பட்ட அப்பாவி பல்கலைக்கழக சிங்கள மாணவ, மாணவிகள் குறித்த மதவாத சக்தியால் தூண்டப்பட்டு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு தயாராகி வருவதாக தெரியவருகின்றது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*