;
Athirady Tamil News

விடுதலைப் புலிகளுக்கு இளநீர் கொடுத்த, இலங்கை இராணுவம்..! (வீடியோ)

0


விடுதலைப் புலிகளுக்கு இளநீர் கொடுத்த, இலங்கை இராணுவம்..! ஒன்பது வருடத்துக்கு முன்னர் நடந்த சம்பவத்தை தற்போது பிரசுரிக்கும் இணையங்கள்..! (வீடியோ)

முள்ளிவாய்க்கால் 9வது வருட நினைவுதினம் நெருங்கிவரும் இந்நிலையில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மூவருக்கு இளநீர் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு செய்தி வெளியிட்டுள்ளன சில தமிழ் இணையங்கள்.

இப் புகைப்படத்தில் இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடனும் இன்னுமொரு உறுப்பினர் சிவில் உடையுடனும் காணப்படுகின்றனர்.

அவர்கள் மிகவும் பயந்த சுபாவத்துடன் காணப்படுவதனால் இவர்களை இராணுவத்தினர் பிடித்துள்ளனர் என நினைக்கத் தோன்றுகின்றது.
இவர்கள் இருவரும் தற்போது எங்கே? என கேள்வி கிளம்புகின்றது.

இவர்கள் கொல்லப்பட்டு விடடார்களா? அல்லது புனர்வாழ்வு அளித்து வாழ்வளிக்கப்பட்டு உள்ளார்களா? என்று தெரியாமலே, செய்திகளை பிரசுரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

“புலிகளின் பெயரில்” மீண்டும், சுவிஸ் மக்களிடம் பணம் சேகரிக்க புறப்பட்டுள்ள “அக்கினிப் பறவைகள்” அமைப்பு..! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*