;
Athirady Tamil News

பிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையை திறக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!

0

டெல்லியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்தபோதிலும் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. பிரதமர் வந்து திறந்து வைக்க நேரம் இல்லாததால், திறப்பு விழா நடைபெறாமல் உள்ளது.

எனவே, இந்த சாலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கும்படி கேட்டது. பிரதமர் வந்து திறப்பதற்காக காத்திருப்பதாக மத்திய அரசு பதில் அளித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, மக்கள் நலத் திட்டங்கள் யாருக்காகவும் காத்திருக்கக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், பிரதமருக்காக ஏன் காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர். அத்துடன், சாலையை திறந்து வைக்க பிரதமர் வர முடியாவிட்டாலும் ஜூன் 1-ம் தேதி முதல் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை திறக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.

135 கி.மீ. நீளமுள்ள இந்த எக்ஸ்பிரஸ் சாலையானது காசியாபாத், பரிதாபாத், கவுதம் புத்தா நகர்(கிரேட்டர் நொய்டா) மற்றும் பல்வால் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்த சாலை திறக்கப்பட்டால் டெல்லி நகருக்குள் பயணம் செய்யும் சுமார் 2 லட்சம் வாகனங்கள் நகருக்குள் வரவேண்டிய தேவை இருக்காது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும். #SupremeCourt #EasternExpressway

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + fifteen =

*