;
Athirady Tamil News

ஒவ்வொரு இந்தியனுக்கும் பிரதமராக கனவு காணும் உரிமை உண்டு – மோடிக்கு சிவசேனா பதிலடி..!!

0

கர்நாடக தேர்தல் பரப்புரையின் போது, 2019-ம் ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பாண்மை பெற்று வெற்றிபெரும் நான் பிரதமராவேன் என ராகுல் காந்தி கூறியிருந்தார். இதனை கிண்டலடிக்கும் வகையில் மறுநாள் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, ‘சீனியர் தலைவர்கள் இருக்கும் போது அவர்களை தள்ளிவிட்டு ராகுல் பிரதமராக பார்க்கிறார்’ என பேசினார்.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவளிக்கும் வகையில் சிவசேனா கட்சிப்பத்திரிக்கையான சாம்னா தலையங்கம் எழுதியுள்ளது. ராகுல் காந்தியின் பிரதமர் கனவு வாழ்த்தக்கூடிய ஒன்று. ராகுல் காந்தி தலைமையை வீழ்த்துவது பாஜகவுக்கு கடும் சவாலாக உள்ளது என அதில் தெரிவிக்கப்படுள்ளது.

மேலும், அக்கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத் பேசுகையில், “ஒவ்வொரு இந்தியனுக்கும் பிரதமர் கனவு காண முழு உரிமை உள்ளது. பிரதமர் மோடி தன்னை பிரதான சேவகர் என கூறிக்கொள்கிறார். அப்படியென்றால் நாட்டில் உள்ள மற்ற சேவகர்களும் பிரதமராக ஆகலாம்” என கூறினார். #PMModi #ShivSena

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 20 =

*