;
Athirady Tamil News

கர்நாடக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று போலீஸ் அதிகாரிகள் சாலை விபத்தில் பலி..!!

0

கர்நாடகா மாநிலம் சட்டமன்ற தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்து சட்டமன்ற தேர்தல் பணிக்காக துணை காவல் கண்காணிப்பாளர் பாலேகவுடா(55), காவல் ஆய்வாளர் கே.எஸ் சிவசாமி மற்றும் வாகன ஓட்டுனர் வேணுகோபால்(24) ஆகிய மூவரும் போலீஸ் வேனில் சென்றுகொண்டிருந்தனர். பாகல்கோட் மாவட்டம் மல்லபூர் சந்திப்பு அருகே எதிரே வந்த வேனில் மோதி போலீஸ் வேன் விபத்தில் சிக்கியது. இதில் போலீஸ் வேனில் பயணம் செய்த மூவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாகல்கோட் நகர போலீசார் இந்த வபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். விபத்தில் உயிரிழந்த பாலேகவுடா மற்றும் கே.எஸ் சிவசாமி, கர்நாடக சிஐடி போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*