;
Athirady Tamil News

கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு ; இருவர் கைது..!!

0

மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் மேற்கெள்ளப்பட்ட இருவேறு சுற்றி வளைப்புக்களின் போது சுமார் 3000 ஆயிரம் கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்காள அதிகாரிகளால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்னர்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு இணங்கவே இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய நேற்று அம்பேகமுவ குகுல் கொட்டுவ காட்டுப் பகுதியில் 2000 கஞ்சா செடிகளும் அப் பிரதேச வீடொன்றின் தோட்டத்தில் பயிரடப்பட்ட 1000 கஞ்சா செடிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவத்தின் போது இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை இன்றைய தினம் வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதுவரித் திணைக்களத்தினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 20 =

*