;
Athirady Tamil News

காணி விடுவிப்பு: ஜனாதிபதியின் கூற்றை ஏற்க மறுக்கும் ஹக்கீம்..!!

0

வடக்கு- கிழக்கில் 85 வீத காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்றை ஏற்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இனப்பிரச்சினைக்கான தீர்வு இனியும் இழுத்தடிக்கப்படக் கூடாது. இந்நிலை நீடித்தால் அடுத்த தேர்தலில் அரசியல் கட்சிகள் கூறுகின்றவற்றிற்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள்.

அரசாங்கத்தின் சாதனைகளை பட்டியலிட்டு காட்டும் வகையிலான ஜனாதிபதியின் கொள்கைவிளக்க பேருரை ஏமாற்றமளித்துள்ளது. தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் தொடர்பிலும், சமவுரிமை, கலாசாரம் தொடர்பிலும் ஓரிரு நிமிடங்கள் பேசப்பட்ட போதிலும், அவற்றை அடைவதற்கான அனுகுமுறைகள், வழிமுறைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை.

இதேவேளை, 85 சதவீத காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கூறினாலும் அதை முழுமையாக ஏற்கமுடியாது. வடக்கு, கிழக்கில் இன்னும் விடுவிக்கப்படாமல் காணிகள் இருக்கின்றன” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*