;
Athirady Tamil News

யாழ். வடமராட்சியின் பல பகுதிகளில் நாளை மின்தடை..!!

0

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(11) மின்சாரம் தடைப்படிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை- 05 மணி வரை யாழ். குடாநாட்டின் மருதங்கேணி, உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், முள்ளியான், தாளையடி ஐஸ் தொழிற்சாலை, நாகர் கோயிலின் ஒரு பகுதி, குடாரப்பு, செம்பியன்பற்று, மாமுனை, தாளையடி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 17 =

*