;
Athirady Tamil News

சிவத்தமிழ் வித்தகர் எழுதிய நற்சிந்தனை மலர் நூல் வெளியீடு நாளை..!! (வீடியோ)

0

சிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவ.மகாலிங்கம் எழுதிய “நற்சிந்தனை மலர்” நூலின் வெளியீட்டு விழா யாழ். குப்பிளான் தெற்குச் சிவபூமி ஞான ஆச்சிரம மண்டபத்தில் நாளை வியாழக்கிழமை(10) முற்பகல்-10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

குப்பிளான் கற்பக விநாயகப் பெருமானின் பக்தர்களான சிவசுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதிகளின் நினைவாக இந்த நூல் வெளியிடப்படவுள்ளது. முன்னதாக காலை-09 மணி முதல் தம்பதிகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டி விசேட கூட்டுப் பிரார்த்தனை இடம்பெறும்.

சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த நூலை வெளியிட்டு வைக்கவுள்ளார். கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பிரதி அதிபர் ச. லலீசன் நூலின் ஆய்வுரையை நிகழ்த்தவுள்ளார்.

பழமை வாய்ந்த இந்துசாதனப் பத்திரிகையில் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் இந்துசாதனம் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது.

இந்த நூலில் நாவடக்கம், மூவகைப் பலம், அன்னதானத்தின் பயன், பிரார்த்தனையின் முக்கியத்துவம் உள்ளிட்ட 16 பயனுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளதாக நூலாசிரியர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய குலதெய்வமாகிய குப்பிளான் கற்பக விநாயகர் ஆலயம் தொடர்பாக முதலாவது கட்டுரை அமைந்துள்ளது.இந்த நூல் ஒரு நற்சிந்தனை மலராக சாதாரண மக்களுக்குச் சைவசமயத்தின் அடிப்படை உண்மைகளை உணரவைக்கின்றதொரு மலராகவுள்ளது.

ஆகவே, இந்த நூல் வெளியீட்டு விழாவிலும், கூட்டுப் பிரார்த்தனை நிகழ்விலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 2 =

*