;
Athirady Tamil News

ரிஷப் பந்த் அதிரடி சதம்… டெல்லி 187 ரன்கள் குவிப்பு…. ஹைதராபாத்தை சுருட்டுமா..!!

0

டெல்லியில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் அபாரமாக விளையாடி சதமடித்தார். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 41 ஆட்டங்கள் முடிந்துள்ளன. ஹைதராபாத் அணி 10 ஆட்டங்களில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்க ஹைதராபாத் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே போட்டி உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு ஒவ்வொரு அணியும் தீவிர முயற்சியில் உள்ளன. அடுத்து விளையாடும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டத்தட்ட அனைத்து அணிகளுக்கும் உள்ளது. அதனால், எந்தெந்த அணிகள் முன்னேறப் போகின்றன என்பது தொடர்ந்து சர்பரைசாகவே உள்ளது.

அசத்தும் பவுலிங் இந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் மிகவும் வலிமையான அணியாக உள்ளது. பேட்டிங்கில் ஹைதராபாத் அணி கில்லியாக உள்ளது. அதே நேரத்தில் குறைந்த ஸ்கோரை அடித்தாலும், அதை சமாளிக்கக் கூடியதாக ஹைதராபாத் பவுலிங் உள்ளது. பல போட்டிகளில் மிகக் குறைந்த ரன்களை எடுத்தபோதும், அதில் ஹைதராபாத் வென்றுள்ளது. டெல்லி தேறுமா தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததால் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கமபீர் விலகினார்.

புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி நான்கு ஆட்டங்களில் 2ல் வென்று அசத்தியுள்ளது. 10 ஆட்டங்களில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகளைப் பெற்று தற்போது புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் டெல்லி உள்ளது. வெற்றி நம்பிக்கை டெல்லி, ஹைதராபாத் அணிகள் இம்மாதம் 5ம் தேதி மோதின. அதில் ஹைதராபாத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அபாரமாக ஆடியபோதும், ஹைதராபாத் அணியின் ஒட்டுமொத்த ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில், சொந்த மண்ணில் இன்று நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று டெல்லி நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தை சமாளிக்குமா டெல்லியில் நடக்கும் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது. பிருத்வி ஷா 9, ஜாசன் ராய் 11, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3, ஹர்சால் படேல் 24, கிளென் மெக்வெல் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் ஒரு பக்கம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதமடித்தார். அவர் 63 பந்துகளில் 15 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன், 128 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. ஹைதராபாத்துக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*