;
Athirady Tamil News

பணத்­துக்­கா­கப் பொலி­ஸார் பெட்­டி­யு­டன் வீதி­க­ளில் தவம்- சத்­தி­ய­லிங்­கம் குற்­றச்­சாட்டு..!!

0

வடக்கு மாகா­ணத்­தின் சாலை­க­ளில் கட­மை­யில் நிற்­கும் பொலி­ஸா­ரில் பலர் தமது மோட்­டார் சைக்­கிள்­க­ளில் பொருத்­தப்­பட்­டுள்ள பெட்­டி­க­ளைத் திறந்­து­வைத்­த­வாறு பணத்­துக்­கா­கக் காத்­தி­ருக்­கின்­ற­னர் என்று வடக்கு மாகாண முன்­னாள் சுகா­தார அமைச்­ச­ரும் உறுப்­பி­ன­ரு­மான ப.சத்­தி­ய­லிங்­கம் குற்­றம்­சாட்­டி­னார்.

வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில், வடக்கு மாகா­ணத்­தில் அண்­மைக்­கா­ல­மாக விபத்­துக்­கள் கார­ண­மாக பல உயி­ரி­ழப்­புக்­கள் இடம்­பெ­று­கின்­றன. வீதிப் போக்­கு­வ­ரத்து சட்­டங்­க­ளைப் பேண மாகாண சட்ட ஒழுங்கு அமைச்­சர் காத்­தி­ர­மான நவ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று பிரே­ரணை ஒன்­றைக் கொண்­டு­வந்­தார்.

பிரே­ரணை தொடர்­பாக சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­த­தா­வது:
வடக்கு மாகா­ணத்­தில் பொலி­ஸார் வீதிப் போக்­கு­வ­ரத்து விதி­களை கடை­பி­டிப்­ப­தில்லை. மாகாண சபைக்­குட்­பட்ட அரச திணைக்­கள வாகன சார­தி­கள் அதி­வே­க­மா­கப் பய­ணிக்­கின்­ற­னர். பல விபத்­து­க­ளும் உயி­ரி­ழப்­பு­க­ளும் இடம்­பெற்­றுள்­ளன. சில விபத்­து­களை அதி­கா­ரி­கள் மூடி மறைத்த சம்­ப­வங்­க­ளும் உள்­ளன.

அரச வாக­னங்­க­ளுக்கு என்று வேகக் கட்­டுப்­பாட்டு எல்லை கொடு­வ­ரப்­ப­ட­வேண்­டும்.அதற்­கான பொறி­மு­றையை உரு­வாக்க வேண்­டும்.வாக­னங்­க­ளைச் செலுத்­தும்­ போது அலை­பே­சி­யைப் பாவிக்­கும் சார­தி­கள் மீது அந்­தந்த திணைக்­க­ளங்­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

வடக்­கின் முதன்மை வீதி­க­ளில் கட­மை­யில் நிற்­கும் போக்­கு­வ­ரத்­துப் பொலி­ஸார் தங்­க­ளின் மோட்­டார் சைக்­கிள்­க­ளில் உள்ள பெட்­டி­க­ளைத் திறந்­து­விட்­டுப் பணம் போடும்­ வரை பார்த்­துக்­கொண்டு நிற்­கின்­ற­னர்.இதற்­குச் சட்ட ஒழுங்கு அமைச்­சர் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.என்­றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*