;
Athirady Tamil News

தொல்பொருள் முக்கியத்துவமிக்க காணியை சேதப்படுத்தியதற்கு பிரதேச செயலாளர் பொறுப்பில்லை..!!

0

இபலோகம, புளியங்குளம் பிரதேசத்தில் வீட்டுத்திட்டம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு தொல்பொருள் மதிப்புமிக்க காணியை சேதப்படுத்திய சம்பவத்தில் பிரதேச செயலாளர் தவறு இழைக்கவில்லை என்று அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.எம். வன்னிநாயக்க கூறினார்.

வீட்டுத் திட்டத்திற்காக அடிக்கல் நட்டப்பட்ட இடத்திற்கு அருகில் இருக்கின்ற காணி தமிழ் சிங்கள புத்தாண்டு சமயத்தில் பெகோ இயந்திரம் மூலம் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த தொல்பொருள் மதிப்புமிக்க காணியை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் பிரதேச செயலாளர் பெறுப்புக் கூற வேண்டும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவத்தையடுத்து வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் இரண்டு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டமை கூறத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + nine =

*