;
Athirady Tamil News

மைதானத்தில் வானவேடிக்கை காட்டிய ரிஷாப்: இதுவரை யாரும் ஆடாத துடுப்பாட்டம்..!! (வீடியோ)

0

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.டெல்லி டெயார் டெவில்ஸ் மற்றும் ;சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி நேற்று டெல்லியில் இடம்பெற்றது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி டெயார் டெவில்ஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.இதன்படி அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது.

அணி சார்பில் ரிஷாப் பந்த் ஆட்டமிழக்காமல் அதிரடியாக துடுப்பாடி 128 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்பதிலுக்கு துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அணி சார்பில் ஆட்டமிழக்காமல் ஷிக்கர் தவான் 92 ஓட்டங்களையும், அணித் தலைவர் வில்லியம்சன் 83 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

இந்நிலையில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள ;சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, அதில் 9 போட்டிகளில் வெற்றிபெற்று தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 11 =

*