;
Athirady Tamil News

வவுனியா இலங்கை திருச்சபை கலவன் பாடசாலையின் புத்தாண்டு நிகழ்வு..!! (படங்கள்)

0

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் புத்தாண்டு விழா (2018) இன்று (11) பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

புத்தாண்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக தெற்கு வலயத்தின் கல்வி அபிவிருத்தி பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம் கலந்துகொண்டு ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு கைவிசேடம் வழங்கி வைத்திருந்தார்.

நிகழ்வில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பேச்சு, நடனம், குழுப்பாடல், சிங்களப்பாடல் போன்றவற்றுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்ததுடன் புத்தாண்டு நிகழ்விற்கு கலாசார உடையணிந்து மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.

நிகழ்வில் வவுனியா தெற்கு வலயத்தின் கோட்டக்கல்வி பணி;ப்பாளர் எம்.பி.நடராஜன், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + fourteen =

*